பொகவந்தலாவயில் பன்றிக்கு விரிக்கப்பட்ட கம்பிவலையில்சிக்கி உயிரிழந்த சிறுத்தை

பொகவந்தலாவயில் பன்றிக்கு விரிக்கப்பட்ட கம்பிவலையில்சிக்கி உயிரிழந்த சிறுத்தை

பன்றிக்கு விரிக்கப்பட்டிருந்த வலையில் பாரிய சிறுத்தை ஒன்று சிக்குண்டு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் இன்று காலை பொகவந்தலாவ, கொட்டியாகலை மேல் பிரிவு 05 ஆம் இலக்க தேயிலை மலையில் இடம்பெற்றதாக ,பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த நிலையில் கிடந்த சிறுத்தையை இனங்கண்ட தோட்ட பொதுமக்கள் பொகவந்தலாவ பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து பொகவந்தலாவ பொலிஸார் நல்லதன்னி வனவிலங்கு அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
சிறுத்தை உணவு தேடி வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த கம்பி வலையை விரித்த சந்தேகநபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதோடு சிறுத்தையின் சடலம் ரந்தெனிகல மிருக வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்படுவதாக வனவிலங்கு அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

உயிரிழந்த சிறுத்தை 04 அடி நீளம் கொண்ட ஆண் சிறுத்தை எனவும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மற்றும் நல்லதன்னி வனவிலங்கு அதிகாரிகள் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )