சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

பெப்ரவரி மாதத்தின் முதல் 8 நாட்களுக்குள் 80,776 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

மேலும், 2026 ஜனவரி 01 ஆம் திகதி முதல் பெப்வரி 08 ஆம் திகதி வரை 358,103 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர் என்று சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர்களுள் அதிகமானவர்கள், இந்தியா, இங்கிலாந்து, ரஷ்யா ஜேர்மன் மற்றும் சீனா ஆகிய நாடுகளில் இருந்து வருகை தந்துள்ளனர் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )