கொழும்பு மாநகர சபை உறுப்பினர் பதவியில் இருந்து மொஹமட் பாத்திமா சொஹாரா புஹாரி நீக்கம்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் பதவியில் இருந்து மொஹமட் பாத்திமா சொஹாரா புஹாரி நீக்கம்

மொஹமட் பாத்திமா சொஹாரா புஹாரி, கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

கட்சியினால் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு எதிராக செயல்பட்டு, ஆளும் கட்சியான தேசிய மக்கள் சக்தியின் வரவு–செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தமையால், அவரது கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நடவடிக்கை எடுத்திருந்தது.

அதன் அடிப்படையில், அவரது மாநகர சபை உறுப்பினர் பதவியை இரத்துச் செய்ய கொழும்பு மாநகர சபையின் தெரிவத்தாட்சி அதிகாரி பியுமி ஆட்டிகல நடவடிக்கை எடுத்துள்ளார். இதற்கான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )