திஸ்ஸ குட்டியின் பேச்சுக்களால் அதிருப்தியடைந்த அனுராதபுர சோமரதன தேரர் SLPP யில் இருந்து விலகினார்சர்வஜன அதிகாரம் கட்சியில் இணைந்தார்

திஸ்ஸ குட்டியின் பேச்சுக்களால் அதிருப்தியடைந்த அனுராதபுர சோமரதன தேரர் SLPP யில் இருந்து விலகினார்சர்வஜன அதிகாரம் கட்சியில் இணைந்தார்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) அனுராதபுரம் மாவட்டத் தலைவர் திஸ்ஸ குட்டி ஆராச்சியின் செயல்பாடுகள் மற்றும் பேச்சுக்களால் அதிருப்தியடைந்த, கலென்பிந்துனுவெவ பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் அனுராதபுர சோமரதன தேரர் அக்கட்சியிலிருந்து விலகியுள்ளார்.

தற்போது அவர் ‘சர்வஜன அதிகாரம் கட்சியில் இணைந்து, மிஹிந்தலை தொகுதி அமைப்பாளர் பதவியை ஏற்றுக்கொண்டுள்ளார்.

திஸ்ஸ குட்டிஆராச்சி அனுராதபுரம் மக்கள் தொடர்பாக வெளியிடும் கருத்துக்கள் மற்றும் அவரது அரசியல் அணுகுமுறை தனக்கு உடன்பாடில்லை என தேரர் குறிப்பிட்டுள்ளார்.

இதே நிலை நீடித்தால், அனுராதபுரம் மாவட்டத்தில் பொதுஜன பெரமுன கட்சி மக்களிடமிருந்து தனிமைப்படுத்தப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

சர்வஜன அதிகாரம் கட்சியில் இணைந்த பின்னர் சோமரதன தேரர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார் :

“நாங்கள் இனி ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை. மிஹிந்தலை தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் தொகுதி பிரதிநிதிகள் ஒன்றிணைந்துள்ளனர். ஒரு வலுவான அமைப்பை உருவாக்கி மிஹிந்தலை தொகுதியில் பாரிய வெற்றியைப் பெறுவோம். அரசாங்கத்திற்கு நாம் சவால் விடுகிறோம், முடிந்தால் மாகாண சபைத் தேர்தலை நடத்துங்கள். எந்தவொரு தேர்தலுக்கும் ‘சர்வஜன அதிகாரம் ‘ கட்சி தயாராக உள்ளது. திஸ்ஸ குட்டிஆராச்சி போன்றவர்கள் தொலைபேசி மூலமே அரசியல் நடத்துகிறார்கள், ஆனால் நாங்கள் களத்தில் இறங்கி மக்கள் அரசியலை முன்னெடுக்கிறோம்.” என தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )