13 பணயக்கைதிகளை விடுவித்த ஹமாஸ்

13 பணயக்கைதிகளை விடுவித்த ஹமாஸ்

2 ஆண்டுகளாக காசா மீது இஸ்ரேல் நடத்தி வந்த தாக்குதலில் பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர்.

இதுதவிர உணவுக்கு வழியின்றி பஞ்சம், பட்டினியிலும் மக்கள் சிக்கி தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தைக்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

இதன்படி, இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே நேற்று முன்தினம் முதல் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.

இதனை தொடர்ந்து, அமைதிக்கான போர்நிறுத்த ஒப்பந்தம் இறுதி செய்யப்படுவதற்காக, டிரம்ப் இஸ்ரேலுக்கு புறப்பட்டுள்ளார்.

ஹமாஸ் அமைப்பிடம் 20 பணய கைதிகள் வரை உயிருடன் சிறை பிடிக்கப்பட்டு உள்ளனர் என கூறப்படுகிறது. அவர்களில் 7 பணய கைதிகளை, போர்நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, செஞ்சிலுவை சங்கத்திடம் ஹமாஸ் அமைப்பு இன்று (13) விடுவித்தது.

இந்நிலையில் ஹமாஸ் 13 பணயக்கைதிகள் கொண்ட இரண்டாவது குழுவை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைத்துள்ளமையை இஸ்ரேலிய இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )