அக்குரேகொட இரட்டை கொலை : பொது பாதுகாப்பு அமைச்சர் பதவி விலகவேண்டும் !

அக்குரேகொட இரட்டை கொலை : பொது பாதுகாப்பு அமைச்சர் பதவி விலகவேண்டும் !

அக்குரேகொடவில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக் கொல்லப்பட்டமைக்கு பொறுப்பேற்று பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால உடனடியாக பதவி விலக வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் குறித்த கட்சி, சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தமைக்கு அமைச்சர் ஆனந்த விஜேபாலவே பொறுப்பு என்று ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

மேலும், அதிகாரப்பூர்வ சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர், சட்டமா அதிபர், பொலிஸார் கண்காணிப்பாளருடன் கலந்தாலோசித்து இந்த விடயத்தை விசாரிக்க ஒரு பொருத்தமான பொலிஸ் குழுவை நியமிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் ஒப்புதலையும் பெற வேண்டும் என்றும் கட்சி மேலும் கூறியுள்ளது.

உரிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சி சட்டத்தரணிகளுக்கு அதிகபட்ச ஆதரவை வழங்கும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

image
image
image
CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )