மட்டக்களப்பில் 120 மி.மீ க்கும் அதிக மழைவீழ்ச்சி                       குறைந்தபட்ச வெப்பநிலை 13.4°C நுவரெலியாவில் பதிவு

மட்டக்களப்பில் 120 மி.மீ க்கும் அதிக மழைவீழ்ச்சி குறைந்தபட்ச வெப்பநிலை 13.4°C நுவரெலியாவில் பதிவு

நேற்று மட்டக்களப்பில் 128.9 மி.மீ அதிகபட்ச மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதேவேளை, நாட்டின் குறைந்தபட்ச வெப்பநிலையாக 13.4°C நுவரெலியாவில் பதிவாகியுள்ளது.

இலங்கைக்கு தென்கிழக்கே தெற்கு வங்காள விரிகுடாவின் மத்திய கடல் பகுதியில் குறைந்த அழுத்த மண்டலம் தொடர்ந்தும் நிலவுகிறது.

காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை மற்றும் மட்டக்களப்பு ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் எனவும் நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

காற்றின் வேகம்: காற்று வடகிழக்கு திசையிலிருந்து வீசும். இதன் வேகம் மணித்தியாலத்திற்கு 30-40 கி.மீ ஆக இருக்கும்.

களுத்துறையிலிருந்து புத்தளம் ஊடாக மன்னார் வரையிலும், மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகம் அவ்வப்போது 50 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும்.

களுத்துறையிலிருந்து புத்தளம் ஊடாக மன்னார் வரையிலும், மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாக காணப்படும்.

ஏனைய கடற்பரப்புகள் ஓரளவுக்கு கொந்தளிப்பாக இருக்கும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன், அப்போது அக்கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாக மாறக்கூடும்.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிடும் அடுத்தடுத்த முன்னறிவிப்புகள் மற்றும் அறிவிப்புகள் குறித்து அவதானமாக இருக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )