வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, மேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய பலத்த மின்னலுடன் மழை பெய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று இரவு 11.00 மணி வரை செல்லுபடியாகும் வகையில் இந்த எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில், குறித்த பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்றும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், இடியுடன் கூடிய மழை நிலவும் நேரங்களில் பொதுமக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்குமாறும், மரங்களின் கீழ் தங்குதல் மற்றும் திறந்த வெளிகளில் இருப்பதை தவிர்க்குமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )