கிரிக்கெட் உலகம் வளர்ச்சியடைந்து விட்டது …. நாம் அதற்கு ஏற்றவாறு இன்னும் மாறவில்லை – குமார் சங்கக்கார

கிரிக்கெட் உலகம் வளர்ச்சியடைந்து விட்டது …. நாம் அதற்கு ஏற்றவாறு இன்னும் மாறவில்லை – குமார் சங்கக்கார

நியூசிலாந்துக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் இலங்கை
அணி தோல்வியடைந்ததை தொடர்ந்து, முன்னாள் இலங்கை அணித்தலைவர் குமார் சங்கக்கார இலங்கை கிரிக்கெட்டில் அனைத்து நிலைகளிலும் மாற்றம் தேவை என வலியுறுத்தியுள்ளார்.

அவரது சமூக ஊடகத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்

“சுற்றியுள்ள கிரிக்கெட் உலகம் வேகமாக மாறிக் கொண்டிருக்கையில், நாங்கள் அதே விஷயங்களை மீண்டும் மீண்டும் செய்து வேறு முடிவுகளை எதிர்பார்க்க முடியாது.

நாம் த பொருத்தமற்ற அணியாகிவிடும் அபாயம் உள்ளது

இப்போது எல்லோரிடமும் வேதனை உள்ளது, ரசிகர்கள் கோபமாக உள்ளனர்.

வீரர்களும் மிகுந்த மன வேதனையில் உள்ளனர்.

இதுபோன்ற டிரஸ்ஸிங் ரூம்களில் நான் இருந்திருக்கிறேன். அது எளிதான தருணமல்ல.

ஆனால் நாட்டையும் மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவது பெரும் பொறுப்பும் பெருமையும் ஆகும்.

சரியான பாதைக்கு திரும்புவதற்கு அனைத்து மட்டங்களிலும் பெரிய அளவில் வேலை செய்ய வேண்டியுள்ளது. மாற்றம் அவசியம்,” என்றும் சங்கக்காரா வலியுறுத்தியுள்ளார்.

image
CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )