“தமக்கென்று இடம் – அழகான வாழ்க்கை” என்ற கருப்பொருளன் கீழ் புத்தளத்திற்கு 491 வீடுகள்

“தமக்கென்று இடம் – அழகான வாழ்க்கை” என்ற கருப்பொருளன் கீழ் புத்தளத்திற்கு 491 வீடுகள்

“வளமான நாடு – ஒரு அழகான வாழ்க்கை” என்ற அரசாங்கத்தின் இலக்கை நனவாக்கும் வகையில், நாட்டில் உள்ள குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் வீட்டுப் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்காக செயல்படுத்தப்படும் “தமக்கென்று இடம் – அழகான வாழ்க்கை” வீட்டு உதவித் திட்டத்தின் புத்தளம் மாவட்ட நிகழ்ச்சித்திட்டம், பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்னவின் தலைமையில் அண்மையில் (25) நடைபெற்றது.

2026 ஆம் ஆண்டில் புத்தளம் மாவட்டத்தில் 548 கிராம சேவையாளர் பிரிவுகளை உள்ளடக்கிய கையில் 491 வீடுகள் நிர்மாணிக்க எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த வீட்டுத் திட்டங்களுக்காக ரூ. 491 மில்லியன் மதிப்பிடப்பட்ட தொகை ஒதுக்கப்பட்டுள்ளதுடன், ஒவ்வொரு பயனாளிக்கும் ரூ. 1 மில்லியன் (10 லட்சம்) நிதி உதவி கிடைக்கும்.

பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )