பெய்ரூட்டில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல்

பெய்ரூட்டில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல்

லெபனானின் தலைநகர் பெய்ரூத்தை இலக்காகக் கொண்டு வான்வழி தாக்குதல் மேற்கொண்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல், ஹிஸ்புல்லா (Hezbollah) அமைப்பின் ஒரு செயற்பாட்டாளரை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

எனினும், அந்த தாக்குதல் வெற்றிகரமாக அமைந்ததா என்பது குறித்து அல்லது பெய்ரூத் நகரின் எந்த பகுதியில் அது மேற்கொள்ளப்பட்டது என்பது குறித்து மேலதிக தகவல்கள் வெளியிடப்படவில்லை.

இதற்கிடையில், கடந்த சில நாட்களாக பெய்ரூத் நகரம் மற்றும் லெபனானின் பல பகுதிகள் மீது இஸ்ரேல் கடுமையான வான்தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )