
மொஜ்தபா காமேனி பற்றிய தகவல் வழங்கினால்10 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு – அமெரிக்கா அறிவிப்பு
ஈரானின் புதிய உயர் தலைவர் மொஜ்தபா காமேனி மற்றும் அந்நாட்டின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) உயர்மட்டத் தலைவர்கள் குறித்த தகவல்களை வழங்குபவர்களுக்கு 10 மில்லியன் அமெரிக்க டாலர் வரையிலான பணப்பரிசை வழங்க அமெரிக்க வெளியுறவுத்துறை தீர்மானித்துள்ளது.
அதேபோல், ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து முன்னெடுக்கும் போருக்காக, மத்திய கிழக்கு பகுதிக்கு மேலதிக துருப்புக்கள், கடற்படை வீரர்கள் (Marines) மற்றும் போர்க்கப்பல்களை அனுப்பவும் அமெரிக்கா தீர்மானித்துள்ளது.
இதேவேளை , ஹார்முஸ் நீரிணைக்கு அருகிலுள்ள கார்க் தீவில் (Kharg Island) அமைந்துள்ள பல ராணுவ நிலைகள் மீது அமெரிக்கா குண்டுவீசித் தாக்குதல் நடத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
புதிய தலைவராகப் பொறுப்பேற்ற சில நாட்களிலேயே மொஜ்தபா காமேனிக்கு எதிராக அமெரிக்கா மிகப்பெரிய சன்மானத்தை அறிவித்துள்ளது.
கார்க் தீவு என்பது ஈரானின் மிக முக்கியமான எண்ணெய் ஏற்றுமதி முனையமாகும்.
அங்கு அமெரிக்கா குண்டுவீசியிருப்பது ஈரானின் பொருளாதாரத்தை முடக்கும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.
இப்பிராந்தியத்தில் அமெரிக்கா தனது ராணுவ வலிமையை மேலும் அதிகரித்து வருகிறது.

