டுபாய் விமான நிலைய நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தம்

டுபாய் விமான நிலைய நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தம்

டுபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள எரிபொருள் சேமிப்பு தொட்டியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு டுபாய் சர்வதேச விமான நிலையத்தின் செயல்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தீயை கட்டுப்படுத்துவதற்காக தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

இச்சம்பவத்தில் இதுவரை எந்தவிதமான காயங்களும் அல்லது உயிரிழப்புகளும் பதிவாகவில்லை என அதிகாரப்பூர்வ தகவல்கள் குறிப்பிடுகின்றன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )