
சாரதியின் தூக்கக் கலக்கத்தால் விபத்துக்குள்ளான வேன்தெல்தோட்டையில் சம்பவம்
சாரதியின் தூக்க கலக்கத்தினால் வேன் ஒன்று தலை கீழாக புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
கண்டியில் இருந்து தெல்தோட்டை நோக்கி பயணித்த வேன் ஒன்று தெல்தோட்டை க்ரேட்வெளி பெற்றோல் நிரப்பு நிலையம் முன்பாக தலை கீழாக புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் வேனில் பயணித்தவர்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கலஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka

