
தங்க விலை 6000 ரூபாயால் அதிகரிப்பு
உலக சந்தையில் தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது இதனால் இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் கணிசமாக அதிகரித்துள்ளது.
இன்றைய நிலவரப்படி, உலக சந்தையில் தங்கத்தின் விலை $4,150 அதிகரித்துள்ளது.
இலங்கையில் தங்கத்தின் விலை நேற்றுடன் ஒப்பிடும்போது இன்று ரூ.6,000 அதிகரித்துள்ளது என்று சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.
இன்று காலை, கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் ஒரு பவுண் “22 காரட்” தங்கத்தின் விலை ரூ.309,200 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.நேற்று, அதன் விலை ரூ.303,600 ஆக நிலவியது.
இதேவேளை நேற்று ரூ.330,000 ஆக இருந்த “24 காரட்” தங்கத்தின் விலை தற்போது 336,000 வரை விலை அதிகரித்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
CATEGORIES Sri Lanka

