பேருவளையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட மற்றொரு பலநாள் மீன்பிடி படகு கண்டுபிடிப்பு

பேருவளையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட மற்றொரு பலநாள் மீன்பிடி படகு கண்டுபிடிப்பு

பேருவளை பகுதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மற்றொரு பலநாள் மீன்பிடி படகையும் கடற்படையினர் கண்டுபிடித்துள்ளதாக பாதுகாப்பு பிரதியமைச்சர் அருண் ஜயசேகர தெரிவித்தார்.

தேவேந்திரமுனைக்கு தெற்கே ஆழ்கடல் பகுதியில் நேற்று (16) கண்டுபிடிக்கப்பட்ட பலநாள் மீன்பிடி படகு திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட நிலையில், அதற்கிடையில் மற்றொரு சந்தேக படகையும் கடற்படையினர் கண்டுபிடித்துள்ளனர்.

புதிய படகை தற்போது கரைக்கு கொண்டு வருவதாகவும், அதில் உள்ள போதைப்பொருளின் அளவை சரியாகக் கூற முடியாது எனவும் பிரதியமைச்சர் தெரிவித்தார். இதன் விபரங்கள் படகை பரிசோதித்த பின் அறிவிக்கப்படும்.

கடற்படையினர் இதற்கு முன்னரும் கடந்த வாரத்தில் தெற்கு கடற்பரப்பில் 3 பலநாள் மீன்பிடி படகுகளை கண்டுபிடித்துள்ளனர்.

இதன் மூலம் இந்த ஆண்டில் மட்டும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 7 பலநாள் மீன்பிடி படகுகளை கடற்படையினர் சுற்றிவளைத்துள்ளதாக பாதுகாப்பு பிரதியமைச்சர் அருண் ஜயசேகர தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )