
யாழ்ப்பாணத்தில் வீதி விபத்து ; சகோதரர்கள் இருவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணம் கொழும்புத்துறை பகுதியை அண்மித்த பகுதியில் நேற்று (17) மாலை இடம்பெற்ற துயரமான வீதி விபத்தில் சகோதரர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
மணியந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த பிரட்லீ (24) மற்றும் அவரது சகோதரியான டிலக்ஸி (19) ஆகியோரே உயிரிழந்தவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது பவுசருடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விபத்துக்கான காரணம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரதீபன்
CATEGORIES Sri Lanka

