
‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Symphony Orchestra of Sri Lanka இனால் நிதி நன்கொடை
திட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு, Symphony Orchestra of Sri Lanka அமைப்பு ஒரு மில்லியன் ரூபா நன்கொடை வழங்கியது.
இதற்கான காசோலையை அமைப்பின் தலைவர் சர்மினி வெத்திமுனி நேற்று (20) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரசல் அபோன்சுவிடம்
கையளித்தார்.
கொழும்பு மகளிர் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்ற SOSL Christmas Concert இசை நிகழ்ச்சியில் கிடைத்த வருமானமத்தின் மூலம், Symphony Orchestra of Sri Lanka நிறுவனத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் நிறுவனங்களான கொழும்பு மகளிர் கல்லூரி, Unique Sounds மற்றும் Designs by Paala ஆகியவை இணைந்து இந்த நன்கொடையை வழங்கியுள்ளன.
Symphony Orchestra of Sri Lanka அமைப்பின் நியோமால் வீரகோன் மற்றும் நிஷாந்த வர்ணகுலசூரிய ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு

