
சில இடங்களில் பிற்பகலில் மழை பெய்யும் சாத்தியம்
மேல் , சபரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும், நுவரெலியா மாவட்டத்திலும் பிற்பகல் சுமார் 1.00 மணிக்குப் பிறகு ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
நாட்டின் மற்ற பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.
மத்திய, சபரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் காலை நேரங்களில் சில இடங்களில் பனிமூட்டம் ஏற்படக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் அபாயங்களைக் குறைக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CATEGORIES Sri Lanka

