
ஹாரி பாட்டர் புதிய தொடரின் டிரெய்லர் வெளியீடு
உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்ற Harry Potter புத்தகத் தொடரை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள புதிய தொலைக்காட்சித் தொடரின் முதல் டிரெய்லர் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தத் தொடர், 2026 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் HBO Max ஸ்ட்ரீமிங் சேவை மூலம் பார்வையாளர்களுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் சீசன், Harry Potter and the Philosopher’s Stone புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாகவும், முந்தைய திரைப்படங்களை விட கதையை மேலும் விரிவாகவும் ஆழமாகவும் வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய தொடரில், Harry Potter ஆக டொமினிக் மெக்லாலின், Hermione Granger ஆக அரபெல்லா ஸ்டாண்டன், மற்றும் Ron Weasley ஆக அலாஸ்டர் ஸ்டவுட் நடித்துள்ளனர்.
இதனுடன், Albus Dumbledore ஆக ஜான் லித்கோ, Minerva McGonagall ஆக ஜேனட் மெக்டீர், Severus Snape ஆக பாப்பா எஸிடு, மற்றும் Rubeus Hagrid ஆக நிக் ஃப்ராஸ்ட் நடித்துள்ளனர். Lord Voldemort கதாபாத்திரம் இன்னும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், செவரஸ் ஸ்னேப் கதாபாத்திரத்தில் பாப்பா எஸிடு தேர்வு செய்யப்பட்டமை தொடர்பாக சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், அவருக்கு எதிராக விமர்சனங்களும் மிரட்டல்களும் எழுந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

