
வங்காளதேசத்தில் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து ; 23 பேர் பலி
பங்களாதேஷில் ராஜ்பாரி பகுதியில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 23 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
டாக்கா நோக்கி பயணம் செய்த பேருந்து, தவுலத்தியா முனையத்தில் மிதவைப் பாலத்தில் ஏறும்போது பத்மா நதி ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த துயரச் சம்பவத்தில் 23 பேர் உயிரிழந்துள்ளனர், பலர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன, விபத்திற்கான காரணங்களை கண்டறிய அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
CATEGORIES World News

