பாகிஸ்தான் பசை தயாரிப்பு தொழிற்சாலையில் வெடிப்பு சம்பவம் 18 பேர் உயிரிழப்பு 21 பேர் காயம்

பாகிஸ்தான் பசை தயாரிப்பு தொழிற்சாலையில் வெடிப்பு சம்பவம் 18 பேர் உயிரிழப்பு 21 பேர் காயம்

பாகிஸ்தானில் பசை தயாரிப்பு தொழிற்சாலையில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 21 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

பாகிஸ்தானின் கிழக்கு பகுதியான லாகூரைச் சேர்ந்த பைசலாபாத் நகரில் அமைந்துள்ள தொழிற்சாலையொன்றில் இந்த வெடிப்பு சம்பவம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
இந்த வெடிப்பில் பாரியளவு தீ பரவியதுடன் தொழிற்சாலை கட்டிடம் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் அருகிலுள்ள வீடுகளும் சேதமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

வெடிப்பு சம்பவம் இடம்பெற்ற தொழிற்சாலை முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் தொழிற்சாலை உரிமையாளர் சம்பவ இடத்திலிருந்து தப்பிசென்றுள்ளார். அவரை தேடும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுப்பட்டுள்ளனர்.

விபத்திற்கான சரியான காரணம் கண்டறியப்படவில்லையெனினும் இந்த சம்பவம் எரிவாயு கசிவு காரணமாக வெடிப்பு சம்பவம் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

எனினும் கட்டுமானச் சட்டங்களை மீறி, பைசலாபாத்தின் குடியிருப்புப் பகுதியில் தொழிற்சாலை கட்ட கட்டுமான அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்தார் .

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )