
2026 வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடக்கம் ; தேர்தல் ஆணையம்
2026 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலைத் திருத்தும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த செயல்முறைக்காக கிராம அலுவலர்கள் வீடு வீடாகச் செல்ல மாட்டார்கள் என தேர்தல் ஆணையத் தலைவர் ஆர்.எம்.ஏ. எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அதன்படி, 2025 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு, 2026 ஆம் ஆண்டில் சேர்க்கப்பட தகுதியுடையவர்களின் பெயர்களை அடிப்படையாகக் கொண்டு புதிய திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், www.elections.gov.lk என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் மூலம் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்வதற்காக ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கவும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையத் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய வாக்காளர்கள் மற்றும் திருத்தம் தேவையுடையவர்கள் குறிப்பிட்ட காலத்துக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

