
அவுஸ்திரேலியா – அயர்லாந்து போட்டியை இலவசமாக காண ரசிகர்களுக்கு அனுமதி
இன்று கொழும்பில் நடைபெறவுள்ள அவுஸ்திரேலியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டியை, பொதுமக்கள் இலவசமாக நேரில் காண அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
அதற்கமைய, கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதான நுழைவாயில் எண் 4 மற்றும் 5 வழியாக பார்வையாளர்கள் இலவசமாக செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
குறித்த மைதானத்தின் நுழைவாயில்கள் இன்று மதியம் 1.00 மணிக்கு திறக்கப்படவுள்ளதுடன், போட்டி மாலை 3.00 மணிக்கு ஆரம்பமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் ரசிகர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, இலவசமாக போட்டியை நேரில் ரசிக்கலாம் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

