
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் ; பலங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்டோர் நீதிமன்றில் ஆஜர்
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த வண. பலங்கொட கஸ்ஸப தேரர் மற்றும் நான்கு பிக்குகள் உள்ளிட்ட சந்தேகநபர்கள் இன்று (11) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
திருகோணமலை நகரின் கடலோரப் பாதுகாப்பு வலயத்திற்குள் அனுமதியின்றி கூடாரம் அமைத்து புத்தர் சிலையை நிறுவியதாகக் கடலோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவத் திணைக்களம் செய்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் திருகோணமலை கோட்டை வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையின் விகாராதிபதி திருகோணமலை கல்யாணவம்ச திஸ்ஸ தேரர், பலங்கொட கஸ்ஸப தேரர், திருகோணமலை சுகிதவம்ச திஸ்ஸ தேரர் மற்றும் நந்த தேரர் ஆகியோர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

