ஹட்டன் – கொட்டகலையில் மண்மேடு விழுந்ததில் வீடு சேதமாகியது

ஹட்டன் – கொட்டகலையில் மண்மேடு விழுந்ததில் வீடு சேதமாகியது

ஹட்டன் – கொட்டகலை, ஸ்டோனிகிளிப் தோட்ட பிரிவில் வீடொன்றின் மீது மண்மேடு விழுந்ததில், வீட்டின் ஒரு படுக்கையறை முற்றாகச் சேதமடைந்துள்ளதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

நேற்று பிற்பகல் குறித்த வீட்டின் பின்புறம் இருந்த பெரிய மண்மேடு திடீரென சரிந்து
விழுந்துள்ளது.

நுவரெலியா மாவட்டதில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக, இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

மண்மேடு இடிந்து விழுந்ததில் வீட்டின் ஏனைய சுவர்களும் இடிந்து விழும் அபாயமுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அந்த வீட்டில் வசித்த 05 பேர் தற்போது தோட்ட நிர்வாகத்தின் நடவடிக்கையின் பேரில் உறவினர் வீட்டில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த அனர்த்தத்தில் அதிர்ஷ்டவசமாக எவ்வித உயிர்ச் சேதங்களும் ஏற்படவில்லை. எனினும், வீட்டு உபகரணங்கள் மற்றும் உடமைகள் சேதமடைந்துள்ளன.

சம்பவ இடத்திற்கு விரைந்த பிரதேச கிராம உத்தியோகத்தர்கள் சேத விபரங்களைச் கணித்ததுடன் திம்புலபத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )