
கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் குவிந்த மக்கள்
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான வழக்கு இன்று (25) பிற்பகல் 1.00 மணிக்கு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில் கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தைச் சுற்றிபொது மக்கள் குவிந்துள்ளமையால் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக கழகத்தடுப்பு பொலிஸாரும் சிறப்புப் படையினரும் அழைக்கப்பட்டு நீதிமன்ற வளாகத்தை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் 22 ஆம் திகதி கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



CATEGORIES Sri Lanka

