
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கார் தடுப்புச் சுவரில் மோதிய விபத்தில் பெண்ணொருவர் உயிரிழப்பு இருவர் காயம்
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த கார் ஒன்று தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்த விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்தார்.
இந்த விபத்தில் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
நேற்று மாலை இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
கொழும்பிலிருந்து மத்தள நோக்கிச் சென்ற காரின் இடதுபுறத்தில் உள்ள தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்த
விபத்தில் வத்தளையைச் சேர்ந்த 51 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் 30 மற்றும் 36 வயதுடைய இருவர் காயமடைந்து காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
காரின் ஓட்டுநரின் நித்திரை கலக்கத்தால் இந்த விபத்து ஏற்ப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக போலீசார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து பின்னதுவ போக்குவரத்து போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

