தங்கத்தின் விலையில் மாற்றமா ?

தங்கத்தின் விலையில் மாற்றமா ?

இலங்கையில் தங்கத்தின் விலையானது நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று (26) மாற்றங்கள் எதுவுமின்றி அதே விலையில் தொடர்வதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில், இலங்கையில் தற்போதைய தங்க விலை நிலவரப்படி,

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 393,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 361,500 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 49,125 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,188 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

உள்நாட்டு சந்தையில் நிலவும் அதிக கேள்வி காரணமாக தங்கம் தொடர்ந்தும் உச்ச விலையிலேயே நீடித்து வருவதாக வர்த்தக வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )