தைப்பொங்கலை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள்

தைப்பொங்கலை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள்

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்குச் செல்பவர்களின் பயணத்தை சுமுகமாக நடத்தும் வகையில் விசேட போக்குவரத்து சேவைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

இதனிடையே, ஹட்டன், நுவரெலியா மற்றும் பதுளை உள்ளிட்ட பல நகரங்களுக்கு மேலதிக பேருந்து சேவைகள் இயக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதிப் பொது முகாமையாளர் டி.எச்.ஆர்.டி. சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

பண்டிகை காலத்தில் பயணிகள் அதிகரிப்பை கருத்தில் கொண்டு, இந்த விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், பயணிகள் பாதுகாப்பாகவும் வசதியாகவும் தங்களது பயணத்தை மேற்கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )