மத்திய கிழக்கிற்கு அமெரிக்க கடற்படைக் கப்பல் வருகை                      போரில் இணையும் ஹௌதி

மத்திய கிழக்கிற்கு அமெரிக்க கடற்படைக் கப்பல் வருகை போரில் இணையும் ஹௌதி

யேமனின் ஹௌதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேல் மீது தாக்குதல்களைத் தொடங்கியுள்ள நிலையில், சுமார் 3,500 கடற்படை வீரர்களைக் சுமந்து வந்த அமெரிக்கக் கடற்படைக் கப்பல் மத்திய கிழக்கை வந்தடைந்துள்ளதாக நேற்று அமெரிக்க மத்திய கட்டளையகம் (CENTCOM) அறிவித்துள்ளது.

தைவான் அருகே பயிற்சியில் ஈடுபட்டிருந்த ‘யுஎஸ்எஸ் திரிபோலி’ (USS Tripoli) என்ற போர்க்கப்பல், ஈரான் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து மத்திய கிழக்குக்கு அனுப்பப்பட்டுள்ளது.

தற்போது பிராந்தியத்தில் இரண்டு விமானம் தாங்கி கப்பல்கள் மற்றும் 50,000 வீரர்கள் உட்பட கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிலான மிகப்பெரிய அமெரிக்கப் படை குவிக்கப்பட்டுள்ளது.

தரைவழிப் படைகள் இல்லாமலேயே இலக்குகளை அடைய முடியும் என வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ள போதிலும், எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்குமாறு ஜனாதிபதி ட்ரம்ப் அறிவுறுத்தியுள்ளார்.

அணு ஆயுத தயாரிப்புக்களை தடுக்க வேண்டுமென கூறியும் ஆட்சி மாற்றத்திற்காகவும் பிப்ரவரி மாதம் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தின.

இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்கத் தளங்கள் உள்ள வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதோடு, உலக எரிபொருள் விநியோகத்தில் 20% கடந்து செல்லும் முக்கிய ‘ஹார்முஸ் ஜலசந்தியை’ முடக்கியுள்ளது.

லெபனான் மற்றும் ஈராக் ஆயுதக் குழுக்களைத் தொடர்ந்து, யேமனின் ஹௌதி கிளர்ச்சியாளர்களும் இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளனர்.

இது செங்கடல் வழியாகச் செல்லும் வர்த்தகக் கப்பல்களுக்கு மீண்டும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களால் ஈரானில் 82,000 மக்கள் குடியிருப்புக் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன.

போரினால் இதுவரை ஈரானில் 1,900 பேரும், லெபனானில் 1,100 பேரும் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 13 அமெரிக்க வீரர்களும் போரில் கொல்லப்பட்டுள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )