உயர்தர பரீட்சை முடிவுகளின்படி 66% மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு

உயர்தர பரீட்சை முடிவுகளின்படி 66% மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு

2025 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சை ,
இந்த ஆண்டு 66% மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் இடங்களைப் பெற்றுள்ளனர் என தேர்வுகள் ஆணையாளர் நாயகம் ஏ. கே. எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.

கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை முடிவுகள் நேற்று இரவு (31) வெளியிடப்பட்டதாக தேர்வுகள் ஆணையாளர் நாயகம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இந்த ஆண்டு உயர்தர பரீட்சையில் 2,81,810 மாணவர்கள் பங்கேற்றனர், அவர்களில் 1,76,527 பேர் பல்கலைக்கழகத்திற்கு தகுதி பெற்றுள்ளனர்.

இதேவேளை 111 மாணவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தேர்வுகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இந்த ஆண்டு
உயிரியல் பிரிவில்
முதல் இடம் – திலான் சஞ்சனா (ரோயல் கல்லூரி, கொழும்பு)
இரண்டாம் இடம் – கிரிஷான் சசிந்து நாம்தாரா (தக்ஷிலா மத்திய கல்லூரி, ஹொரணை)
மூன்றாம் இடம் – தர்ஷனா கோணேஷ் (ஸ்ரீ சண்முகா இந்து பெண்கள் கல்லூரி, திருகோணமலை) முதல் மூன்று இடங்களையும் கைப்பற்றியுள்ளனர் .

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )