கட்டார் கடற்பரப்பிற்கு அப்பால் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்

கட்டார் கடற்பரப்பிற்கு அப்பால் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்

கத்தார் கடற்பரப்பிற்கு அப்பால் உள்ள கடல் பகுதியில் எண்ணெய் கப்பல் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய இராச்சியத்தின் கடல்சார் முகமை அமைப்பு தெரிவித்துள்ளது.

தாக்குதலின் காரணமாக கப்பலின் ஒரு பக்கதிற்கு சேதம் ஏற்பட்டுள்ள போதிலும், அதில் இருந்த ஊழியர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், கப்பலில் இருந்து கடலுக்குள் எண்ணெய் கசிவு ஏற்படுவது போன்ற சுற்றுச்சூழல் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்திற்கு ஒரு நாளைக்கு முன்னர், டுபாய் கடற்கரைக்கு அருகில் மற்றொரு பாரிய எண்ணெய் கப்பல் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியிருந்தது.

அந்தத் தாக்குதலினால் ஏற்பட்ட தீ பின்னர் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )