தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

தொடர்ந்து நிலவும் வறண்ட வானிலை காரணமாக, அடுத்த சில நாட்களுக்கு தீவின் பல பகுதிகளில் நீர் விநியோகம் மட்டுப்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை அறிவித்துள்ளது.

இத்தகவல் இன்று (02) காலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வெளியிடப்பட்டது.

அதன்படி, சில பகுதிகளுக்கு நீர் விநியோகம் கட்டுப்படுத்தப்படும் நிலையில், மேலும் சில பகுதிகளில் குறிப்பிட்ட மணிநேரங்களுக்கு நீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொதுமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )