
96 % பயிற்சிபெற்ற வைத்தியர்கள் வைத்திய நியமனங்களுக்கு விண்ணப்பம்
பயிற்சிக்கு பின்னரான வைத்திய நியமனங்களுக்காக 96% வைத்தியர்கள் விண்ணப்பித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, மருத்துவப் பயிற்சியை நிறைவு செய்த 453 வைத்தியர்களில் 435 பேர் இதற்காக விண்ணப்பித்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பெயர்ப்பட்டியல், அவர்கள் நியமிக்கப்பட்டுள்ள சேவை இடங்கள் மற்றும் சேவையில் அறிக்கை இட வேண்டிய திகதி உள்ளிட்ட விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

