
பிரபல ஹிந்தி பாடகி ஆஷா போஸ்லேயின் உடல்நிலை கவலைக்கிடம் – வைத்தியசாலையில் அனுமதி
பிரபல ஹிந்தி பாடகி ஆஷா போஸ்லேயின் உடல்நிலை திடீரென மோசமடைந்ததை அடுத்து, மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு கடுமையான சோர்வு மற்றும் நெஞ்சுத் தொற்று ஏற்பட்டதாக அவரது பேத்தி ஸனாய் போஸ்லே தெரிவித்துள்ளார்.
எனினும், மருத்துவமனை மருத்துவர் பிரதீத் சம்தானி கூறுகையில், ஆஷா போஸ்லே அவர்களுக்கு இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அதன் பின்னரே அவர் அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆஷா போஸ்லேயின் உடல்நிலை குறித்துப் பிரதமர் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ‘X’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
”ஆஷா போஸ்லே ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தியைக் கேட்டு மிகுந்த கவலையடைந்தேன். அவர் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.” என மோடி தனது ‘X’ தளத்தில் பதிவிட்டுள்ளார் .
ஆஷா போஸ்லே அவர்களின் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் அவர் விரைவில் நலம்பெற வேண்டி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

