
புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்தின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த சந்தேக நபர் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில்
புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்தின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது .
நவீனமயப்படுத்தப்பட்ட புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்தை சேதப்படுத்திய 33 வயதுடைய குறித்த சந்தேகநபர் நபர் நேற்றைய தினம் (11) களனி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில், சந்தேகநபர் இன்று (12) கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் ஏப்ரல் 17 ஆம் திகதி வரையில் சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

