
மன்னார் பேசாலை கடலில் நீராடச் சென்ற இருவர் பலி
மன்னார், பேசாலை கடலில் நீராடச் சென்ற நால்வரில் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தைப்பொங்கல் பண்டிகையைத் தொடர்ந்து குறித்த நான்கு பேரும் கடலில் நீராடச் சென்ற நிலையில், அவர்களில் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும், மற்றைய இருவரில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதனிடையே, மற்றொரு நபர் உயிருடன் மீட்கப்பட்டு மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும், காணாமல் போன நபரை தேடும் நடவடிக்கைகளையும் பொலிஸாரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் முன்னெடுத்து வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka

