
போதைப்பொருளுடன் இளைஞன் கைது
கண்டி – தவுலகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹந்தெஸ்ஸ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சனிக்கிழமை (07) மாலை இலங்கை காவல்துறையின் கண்டி பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது சந்தேகநபரிடமிருந்து ஐஸ் வகை போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதுடன், அவர் மேலதிக விசாரணைகளுக்காக தவுலகலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் ஹந்தெஸ்ஸ பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தவுலகலை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka

