
‘Walk For Peace’ அமைதி நடைப்பயணம் இன்று தம்புள்ளையில் ஆரம்பம்
சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற ‘Walk For Peace’ (அமைதிக்கான நடைப்பயணம்) இன்று (22) காலை தம்புள்ளையில் அரச அனுசரணையுடன் ஆரம்பமாகிறது.

இன்று காலை 6.30 மணிக்கு தொடங்கிய இந்த நடைப்பயணம், எதிர்வரும் ஏப்ரல் 28ஆம் திகதி வரை தொடர்ச்சியாக நடைபெறவுள்ளது.

இதற்கமைய, வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வணக்கத்திற்குரிய பன்னாகர தேரர் தலைமையிலான பௌத்த தேரர்கள் நேற்று நாட்டை வந்தடைந்துள்ளனர்.
மேலும், ‘ஆலோகா’ எனப்படும் நாயும் இந்த அமைதி நடைப்பயணத்தில் தேரர்களுடன் இணைந்திருப்பது சிறப்பம்சமாகும்.

கடந்த ஒக்டோபர் மாதம் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்திலிருந்து வொஷிங்டன் வரை 10 மாநிலங்களை கடந்து 110 நாட்கள் நீடித்த நடைப்பயணத்தில், 200-க்கும் மேற்பட்ட பௌத்த தேரர்கள் கலந்து கொண்டு உலகளவில் கவனம் பெற்றிருந்தனர்.
அதனைத் தொடர்ந்து, ‘ஏஹிபஸ்ஸிகோ’ (Ehipassiko) என்ற பெயரில் இந்நடைப்பயணம் இலங்கையிலும் நடத்தப்படுகிறது.
இந்நடைப்பயணத்தின் முதல் நாளான இன்று, மாத்தளை அலுவிஹாரை வரை பயணம் மேற்கொள்ளப்படவுள்ளது.

