
13 வயது சிறுவனை காணவில்லை ; தகவல் வழங்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை
கம்பஹா – கீழ் இம்புல்கொட பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுவன் ஒருவர் நேற்று (22) முதல் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
“சித்துல நிம்சத்” என அடையாளம் காணப்பட்டுள்ள இந்த சிறுவன், நேற்று முதல் வீடு திரும்பாத நிலையில் இருப்பதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
காணாமல் போன நேரத்தில், அவர் நீல நிற ஸ்ரீ லங்கா கிரிக்கெட் டீ-ஷர்ட் மற்றும் க்ரீம் நிற கால்சட்டை அணிந்திருந்ததாக கூறப்படுகிறது.
இந்த சிறுவனைப் பற்றிய எந்த தகவலும் கிடைத்தால், உடனடியாக 077 555 4959 அல்லது 077 555 4979 என்ற தொலைபேசி எண்களுக்கு தொடர்புகொள்ளுமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
CATEGORIES Sri Lanka

