
இணுவில் கந்தசுவாமி கோவில் அருகில் முதியவர் சடலம் மீட்பு
யாழ்ப்பாணம் இணுவில் கந்தசுவாமி கோவிலுக்கு அருகில் இன்று அதிகாலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கோவில் அருகில் சடலம் காணப்படுவதை அவதானித்த பொதுமக்கள் சுன்னாகம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் முதற்கட்ட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
உயிரிழந்தவர் சுதுமலை பகுதியைச் சேர்ந்த 75 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையான காசிப்பிள்ளை மாதுருபாகன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் சுன்னாகம் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பிரதீபன்
CATEGORIES Sri Lanka

