
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை
இன்று (24) பிற்பகல் 1.00 மணிக்கு பின்னர் தீவின் பல பகுதிகளில் பலத்த மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் அபாயம் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதன்படி, மேற்கு, சபரகமுவ, மத்திய, வடமேற்கு, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், அனுராதபுரம் மாவட்டத்திலும் இடியுடன் கூடிய மழை ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மின்னல் தாக்கம் ஏற்படும் அபாயம் உள்ளதால் பொதுமக்கள் கவனமாக இருக்குமாறும், திறந்த வெளிகளில் இருப்பதை தவிர்க்குமாறும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

