சர்வதேச தாய் சி  தினம் கொழும்பு காலி முகத்திடலில் கொண்டாடப்பட்டது

சர்வதேச தாய் சி தினம் கொழும்பு காலி முகத்திடலில் கொண்டாடப்பட்டது

இலங்கை – சீன சமூக மற்றும் கலாசார ஒத்துழைப்பு சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட “அனைத்தும் நல்லிணக்கத்துடன்” (All Things in Harmony) என்ற தொனிப்பொருளிலான விசேட தாய் சி மேம்பாட்டுத் திட்டம் நேற்று கொழும்பு காலி முகத்திடலில் மிக வெற்றிகரமாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் கௌரவ இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே மற்றும் இலங்கைக்கான சீனத் தூதுவர் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

பிரபல பாடகர் சங்கீத் வீரசிங்க அவர்கள் கலந்துகொண்டு நேரடி தாய் சி செயலமர்வில் பங்கேற்றமை இந்த விழாவின் ஒரு சிறப்பம்சமாகும். இலங்கையிலுள்ள சீனத் தூதரகம், இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் மேல் மாகாண சபை ஆகியவற்றின் முழுமையான அனுசரணையுடன் நடைபெற்ற இவ்விழாவில் பெருந்திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் மன அமைதிக்காக தாய் சி கலையை இலங்கை மக்களிடையே பிரபல்யப்படுத்துவதே இந்த வேலைத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )