
இந்தோனேசியாவில் ரயில் விபத்து ; 7 பேர் உயிரிழப்பு
இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தா அருகே இடம்பெற்ற ரயில் விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெகாசி திமூர் ரயில் நிலையம் பகுதியில், நடைமேடையில் நின்றிருந்த பயணிகள் ரயில் மீது மற்றொரு விரைவு ரயில் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சம்பவம் தொடர்பான தகவல் கிடைத்தவுடன் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தொடர்ச்சியான மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருவதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
CATEGORIES World News

