ஜனாதிபதியால் பிரகடனப்படுத்தப்பட்ட பொது அவசரகாலத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடித்து வர்த்தமானி வெளியீடு

ஜனாதிபதியால் பிரகடனப்படுத்தப்பட்ட பொது அவசரகாலத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடித்து வர்த்தமானி வெளியீடு

ஜனாதிபதியால் பிரகடனப்படுத்தப்பட்ட பொது அவசரகால நிலைமை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி செயலாளர் கலாநிதி என். எஸ். குமனாயக்கவினால் நேற்று (28) வெளியிடப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்ட தித்தவா சூறாவளி அனர்த்த நிலைமையைக் கருத்திற் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பொதுப் பாதுகாப்பு, நாட்டின் இயல்பு நிலையைப் பேணுதல் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரத்திற்கு அவசியமான விநியோகங்கள் மற்றும் சேவைகளைத் தடையின்றி முன்னெடுப்பதற்காக இந்த அவசரகால நிலைமை நீடிக்கப்பட்டுள்ளது.

அரச கூட்டுத்தாபனங்கள், அரசாங்கத் திணைக்களங்கள், உள்ளூராட்சி நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் வழங்கப்படும் சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தலும் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக,

மின்சார விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகள்.
பெட்ரோலிய உற்பத்திப் பொருட்கள் மற்றும் எரிவாயு உள்ளிட்ட எரிபொருள் விநியோகம்.
சுகாதாரத் துறை சார்ந்த அனைத்து சேவைகள்.
பொதுப் போக்குவரத்துச் சேவைகள் உள்ளிட்ட பல துறைகள் ஜனாதிபதியால் பிரகடனப்படுத்தப்பட்ட பொது அவசரகாலத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடித்து வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )