மாதம்பிட்டிய ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் 21 வயதுடைய இளைஞன் கைது

மாதம்பிட்டிய ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் 21 வயதுடைய இளைஞன் கைது

மாதம்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரன்முத்து செவன பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (30) இரவு வாலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளினால் இந்தச் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஐஸ் போதைப்பொருள் -33 கிராம் 210 மில்லிகிராம்

ஹெரோயின் -17 கிராம் 570 மில்லிகிராம் ஆகியன சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்டன .

போதைப்பொருள் வியாபாரம் மூலம் ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 135,500 ரூபாயும் கைப்பற்றப்பட்டது .

கைது செய்யப்பட்டவர் கொழும்பு 15 பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் எனவும் சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக மாதம்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாதம்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )