
தமிழக சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடக்கம் ; தவெக முன்னிலை
தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் (ஏப்ரல் 23) ஒரே கட்டமாக நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.
முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டதையடுத்து, தற்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் வெளியாகியுள்ள இடைக்கால முன்னிலை நிலவரப்படி, தவெக அதிக தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.
அதன்படி தற்போதைய நிலவரம் பின்வருமாறு:
தவெக – 80
திராவிட முன்னேற்றக் கழகம் – 47
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் – 48
நாம் தமிழர் கட்சி – 0
மீதமுள்ள தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருவதுடன், இறுதி முடிவுகள் பின்னர் அறிவிக்கப்படவுள்ளன.

