ஏமன் மீது இஸ்ரேல் தாக்குதல்

ஏமன் மீது இஸ்ரேல் தாக்குதல்

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான ஆயுதம் மற்றும் குண்டுவீச்சு தாக்குதல்களுடன் கூடிய மோதல் ஓராண்டுக்கு மேலாக தொடர்கிறது.

இந்த போரில், ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கு ஆதரவு தெரிவித்து, ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேலை எதிர்த்து நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

அரபிக்கடல் மற்றும் செங்கடலில் இஸ்ரேல் தொடர்புடைய சரக்கு கப்பல்களை ஹவுதி குழுக்கள் கடந்த வாரங்களில் பலமுறை குறிவைத்து தாக்கியுள்ளன.

இதற்கெதிராக இன்று ( 17) இஸ்ரேல், ஏமனின் ஹுடைடா துறைமுகத்தில் ஹவுதிகள் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை வான்வழி தாக்குதல் மூலம் குறிவைத்து தாக்கியது.

இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர், “ஹவுதிகள் மீண்டும் இஸ்ரேலை குறிவைத்து தாக்கினால், அதற்கு கடுமையான பதிலடி அளிக்கப்படும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )