வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

இலங்கையின் பல பகுதிகளில் பலத்த மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி, மத்திய, சபரகமுவ, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களுடன், களுத்துறை, பொலன்னறுவை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இன்று (04) இரவு 11.30 மணி வரை இந்த எச்சரிக்கை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கூறிய பகுதிகளில் இன்று பிற்பகல் 1 மணிக்கு பின்னர் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும், சில இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மின்னல் தாக்கத்தால் ஏற்படக்கூடிய விபத்துகளைத் தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் மேற்கொள்ளுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )